திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:36 IST)

கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ; நாங்கள் அரசியலில் ஹீரோ: அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த சில நாட்களாக கமல்ஹாசனும் தமிழக அமைச்சர் ஜெயகுமாரும் எதிரும் புதிராக விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.

நேற்று கமல் அரசியலில் இன்னும் பக்குவப்படவில்லை என்று ஜெயகுமார் கூற அதற்கு கமல், 'அமைச்சர் என்னிடம் சம்பளம் வாங்காத தொடர்பாளராக பணியாற்றி வருவதாக கூறினார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ என்றும் நாங்கள் அரசியலில் ஹீரோ என்றும் கூறினார்.

மேலும் கமல் அரசியலில் ஒரு அப்ரண்டீஸ் என்றும், அவர் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு கமல் என்ன பதிலடி கொடுக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்