தமிழகம் முழுவதும் கடையடைப்பு : காவிரி போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு
திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இன்று அறிவித்த கடையைடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகர் சங்கமும் ஆதரவு கொடுக்க, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஆளும் கட்சியின் சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு மட்டுமே பொதுமக்கள் பெரும்பாலும் ஆதரவு அளிப்பார்கள். ஆனால், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய கடையடைப்பிற்கு பொதுமக்கள் தங்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர்.
கட்சி எதுவாயினும், காவிரி நீர் பிரச்சனை என்பதாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடையடைப்பு மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.