1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin visited duraimiurugan in hospital

துரைமுருகனை நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின் !

துரை முருகன்
நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் துரைமுருகன் அவரது சுறுசுறுப்புக்கும் நகைச்சுவைக்கும் பெயர் போனவர். திமுகவில் பொருளாளர் மற்றும் துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக அடிக்கடி உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் இதே போல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட அவரை திமுக தலைவர் ஸ்டாலின் சென்று நலம் விசாரித்தார். உடல்நிலை சீராகியுள்ள துரைமுருகன் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சத்தம் இல்லாம சைலண்டா பண்ணுங்க! – பிரதமர் மோடி அட்வைஸ்!