தொடர்புடைய செய்திகள்
- சர்வதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும்… சீமான் பிரச்சாரம்!
- தமிழகத்திற்கு ஐந்து தலைநகரங்கள் - சீமான் !
- ஒருத்தர் ஏந்துனா பிச்சை..பலர் ஏந்தினால் இலவசம்! – சீமான் பேச்சு!
- சீமான் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: 5,000 பேருடன் மாஸ் காட்டிய திமுக வேட்பாளர் !!
- உண்மையான ஆண்டு வருமானம் இதுதான்: மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்த சீமான்
10 மணி வரை பிரச்சாரம்... சீமான் அண்ட் கோ மீது வழக்குபதிவு!
சீமான் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு விருதுநகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் செல்வகுமார் (விருதுநகர்), ஆனந்த ஜோதி (திருச்சுழி), பிரியா (சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி (சாத்தூர்), அபிநயா (ஸ்ரீவில்லிபுத்தூர்), உமா அடைக்கலம் (அருப்புக்கோட்டை) ஆகிய 7 தொகுதி வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் 450 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
