சீமான் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: 5,000 பேருடன் மாஸ் காட்டிய திமுக வேட்பாளர் !!
மாஸ் காட்டிய திமுக வேட்பாளர் 5,000 பேருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை திருவிழா போன்று களைகட்டியது.
சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.
நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதனால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் தீவிரமாக வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 9 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டு உள்ள கேபி சங்கர் இன்று மனுதாக்கல் செய்தார்.
முன்னதாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை மார்க்கெட் பகுதியில் இருந்து திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவேந்திரனிடம் தனது மனுவை பதிவு செய்தார் .
இதனையடுத்து வெளியில் வந்த வேட்பாளருக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். இதனை அடுத்து பேசிய சங்கர் அதானி க்கும் அம்பானிக்கும் கைக்கூலியாக செயல்படும் சீமான் இந்த தேர்தலில் காணாமல் போய்விடுவார் காரைக்குடியில் போட்டியிட வேண்டிய சீமான் திருவொற்றியூரை தேர்ந்தெடுத்தது எதற்காக திருவெற்றியூர் தொகுதியில் மு க ஸ்டாலின் தம்பியாக போட்டியிடும் நான் சீமானை டெபாசிட் இழக்க செய்வேன் என தெரிவித்தார் .
கட்டுக்கடங்காமல் விலை ஏறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சீர் நிறுத்த முக ஸ்டாலின் முதல்வர் முதல்வரானால் மட்டுமே முடியும் என தெரிவித்தார்.