1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Case filed against Murugadoss for sarkar

உச்சகட்ட பரபரப்பில் சர்கார்...முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு?

சர்கார்
சர்கார்  படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விஜய் மற்றும் முருகதாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
 
சமூக நலனை சீர்குலைக்கும் வகையில் இப்படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. ஆகவே இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சர்கார் சர்ச்சை: அமைச்சர்களின் அடுக்கடுக்கான குற்றசாட்டு..!