வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 நவம்பர் 2018 (11:00 IST)

மெர்சலில் கொஞ்சம் அரசியல்; சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்

முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் மற்றும் முருகதாஸ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 
இதுமாதியான சர்ச்சைகள் தமிழக அரசியலில் கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து விஜய் ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதாவது, சர்கார் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறியது மெர்சல் படத்தில் கொஞசம் அரசியல் இருக்கும், ஆனால், சர்காரின் அரசியலை மெர்சலாக்கி இருக்கோம் என குறிப்பிட்டார். 
 
அன்று அவர் கூயது போலவே சர்சாரில் அரசியலை மெர்சலாக்கியுள்ளனர். மெர்சல் படத்தில் மத்திய அரசை விமர்சித்து, சர்கார் படத்தில் மாநில அரசை விமர்சித்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.