சர்கார்: துபாயில் தளபதி ஆட்சி ஆரம்பம் ...!

Last Modified வியாழன், 8 நவம்பர் 2018 (12:36 IST)
விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம்தான் இந்த ஆண்டின் தீபாவளி ஸ்பெஷல். கதை திருட்டு விவகாரம், தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் , அரசியல்வாதிகளின் தொல்லை இவை அனைத்தையும் எதிர்கொண்டு சர்கார் சாதனையை படைத்துள்ளது.

 
தீபாவளி சரவெடியாக சர்கார் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் விஜய் திரைப்பயணத்தியே மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
 
ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி என்பதை தாண்டி படம் முழுவதிலும் தற்போதைய அரசியலின் வண்டவாளத்தை பிரித்து மேய்ந்துள்ளனர். ஆதலால்  இப்படம் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் படமாக அமைந்துவிட்டது.
 
இந்த நிலையில் யுஏஇ ல் சர்கார் முதல் நாளே ரூ. 6 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.
 
இதன் மூலம் சர்கார் படம், ரஜினியின் கபாலி சாதனையை முறியடித்துள்ளது, துபாயில் தற்போது தளபதி தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :