தொடர்புடைய செய்திகள்
- சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்
- சென்னையில் திடீரென மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
- மு.க ஸ்டாலினின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கொரோனா உறுதி
- ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக்க தடையில்லை - நீதிமன்றம்
- இன்று எங்கெங்கு மழை? லிஸ்டு போட்ட வானிலை ஆய்வு மையம்
நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் விபத்து: 6 பேர் பலி
நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளானதால் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
நேற்றிரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு கார் சென்றது. கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் அந்த பகுதியில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான கார் டாடா சுமோ கார் என்றும், இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் பலியான நிலையில் சாலையில் இருந்த 2 பேர் படுகாயமடைந்ததாகவும், காயம் அடைந்த அந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்த்ஹிகள் வெளியாகியுள்ளது
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
