செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (08:07 IST)

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம்  நடைபெற்றது இந்த தேர்வை மொத்தம் 8,42,512 மாணவ, மாணவியர்கள் எழுதியுள்ளனர். கொரோனா காரணமாக ஒருசில தேர்வுகளை சில மாணவர்கள் எழுதவில்லை என்றும், அவர்களுக்கு தனியாக மறுதேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது விடைத்தாள்களை திருத்தி முடித்துவிட்டதனால், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல் போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு