திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (20:51 IST)

விஜயகாந்த் தீவிர ரசிகர் மாரடைப்பால் மரணம்.. திடீரென உயிரிழந்த சோகம்..!! கதறி அழுத ஊர் மக்கள்..!!

dmdk death
மேலூர் அருகே விஜயகாந்த் இறந்த துக்கத்தில் அவரது தீவிர ரசிகரம், தேமுதிக நிர்வாகியுமான மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே  எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி 45. இவர் தீவிர விஜயகாந்த் ரசிகர் ஆவார்.  மேலும் தேமுதிக கட்சியின் கொட்டாம்பட்டி ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.
ALSO READ: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. 
 
hospital
அண்மையில் விஜயகாந்த் உயிரிழந்ததையடுத்து சோகமாக இருந்து வந்த ஆண்டி இன்று காலை வேலைக்கு செல்லும் போது மயங்கி விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரால்  மீட்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.  
 
உயிரிழந்த ஆண்டி,  விஜயகாந்த் இறந்ததில் இருந்து சோகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் இறந்த அதிர்ச்சியிலேயே இருந்து வந்த ஆண்டி மாரடைப்பால் உயிரிழந்தது கட்சியினரிடையும், அவரது குடும்பத்தினரிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.