திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (14:37 IST)

காசிமேட்டில் கப்பல் வாங்க போறீங்கலாமே- அண்ணாமலையை கிண்டலடித்த திமுக பிரமுகர்

bangaloreflood
கர்நாடக  மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளக்காடான நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கர் நாடக மா நிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் 16 செமீ மழை பெய்த நிலையில் பல பகுதிகள் வெள்ளக்காடானது.

அங்குள்ள ஏரிகள் நிரம்பியுள்ளததால் மழை நீர் வடிகால்கள் நிரம்பி, மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால், மாணவர்களும்,மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில்க் சிக்கியவர்களை டிராக்டர்கள் கொண்டு மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூர் விமான  நிலைத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

கர் நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், திமுக பிரமுகரான ஆர். ராஜிவ் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், பெங்களூர் போயி மக்களை மீட்க காசிமேட்டில் கப்பல் வாங்க போறீங்கலாமே மெய்யாலுமா @annamalai_k ?

மறக்காமே அந்த photographer-ah கூட்டிட்டு போங்க!!

அப்பதான் அந்த கர்நாடக சிங்க முகத்தை பார்க்க முடியும் என கிண்டலடித்துள்ளார்.

தமிழகத்தில் திராவிட மாடலை அண்ணாமலை குறைகூறி வரும் நிலையில் திமுக பிரமுகர் இப்படிக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதது.