திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:16 IST)

பாஜகவில் இணைந்த அலிஷா அப்துல்லா: அண்ணாமலை வரவேற்பு!

alisha abdulla
பாஜகவில் இணைந்த அலிஷா அப்துல்லா: அண்ணாமலை வரவேற்பு!
பிரபல பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜகவில் அவரை வரவேற்க அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
அதர்வா நடித்த இரும்புக்குதிரைகள் என்ற திரைப்படத்தில் நடித்தவரும் இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா திடீரென பாஜகவில் இணைந்துள்ளார் 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அண்ணாமலை கொடுத்த மரியாதை மற்றும் மதிப்பு காரணமாக பாஜகவில் இணைந்தேன் என்று கூறிய அலிஷா, என்னால் முடிந்தவரை பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்
 
பைக் ரேசரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா, அஜித்துக்கு நெருக்கமானவர் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது