வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:20 IST)

‘மோடி கபடி லீக்' போட்டி: கோப்பையை அறிமுகம் செய்துவைத்த அண்ணாமலை

Modi annamalai
பிரதமர் மோடியின் பெயரில் கபடி லீக் போட்டி கோப்பையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்துள்ளார். 
 
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மோடி கபடி லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட கோப்பையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார்
 
அதன்பின் அவர் பேசியபோது ’இளைஞர்கள் வெற்றி தோல்வியை சமமாக கருதவேண்டும் என்றும் விளையாட்டுப்போட்டிகள் மனநிலையை வளர்க்கின்றன என்றும் அரசியல் கலப்பின்றி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மோடி கபடி லீக் போட்டி நடைபெறும் என்றும் இதில் 5,000 அணிகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் கபடி வீரர்கள் விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ 15 லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்