வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (08:42 IST)

அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரை சிக்கிமில் 5 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
 
மேலும் மகராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ராஜஸ்தான் ஹரியானா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 30ல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன