புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:08 IST)

மார்ச்க்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல்?? – மாநில தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தலும் நடந்தது. ஆனால் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் இதுவரை நடைபெறாமல் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் விளக்கமளித்துள்ள தமிழக மாநில தேர்தல் ஆணையம் ” நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். தேர்தலை நடத்துவதற்கு கட்டாயம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.