பூத் ஸ்லிப் இல்லைனா பரவாயில்ல.. ஓட்டுதான் முக்கியம்! – தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களர்களிடம் பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடிகளில் பூத் ஸ்லிப் இல்லாமல் வரும் வாக்காளர்களுக்கும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தாலும் அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.