வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (13:24 IST)

திறக்கப்பட்டது தளபதி விஜய் நூலகம்.. என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது?

தளபதி விஜய் நூலகம் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் திறக்கப்பட்டது என்பதும் சென்னையில் இரண்டு இடங்களில் புஸ்ஸி ஆனந்த் இன்று நூலகத்தை திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,  தளபதி விஜய் நூலகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்  சார்பாக, இன்று தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக #தளபதிவிஜய்நூலகம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  இந்த நூலகத்தில் பெரியார், காந்தி, காமராஜர், அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பது  புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.

Edited by Mahendran