ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2023 (15:04 IST)

தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்: புஸ்ஸி ஆனந்த்

BUSSY ANAND
தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தகவல்  தெரிவித்துள்ளார்.
 
'தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும்  என்றும், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
 
கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
 
மேலும் இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், விலையில்லா உணவகத்தை தொடர்ந்து தற்போது தொழிற்சங்கமும் விரிவாக்கம் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
 
Edited by Siva