234 தொகுதிகளிலும் விரைவில்...'விஜய் மக்கள் இயக்கத்தின்' முக்கிய திட்டம்
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் விரைவில் தளபதி விஜய் நூலகம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தை அடுத்து, விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய்68 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் சினிமாவில் நடிப்பதுடன், அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இதையொட்டி, விஜய் மக்கள் இயக்கத்தை பலடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது இயக்கத்தின் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர், மருத்துவர் அணி மற்றும் மாணவர்களுக்கு கல்வி விழா விருது என எல்லோருக்கும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அத்துடன், விஜய் இலவச சட்ட மையம், இலவச பயிலகம், மருந்தகம் ஆகியவை தொடங்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் விரைவில் தளபதி விஜய் நூலகம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது. அனைத்து நூலகங்களுக்கும் தேவையான புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.