1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Buses collide head-on in an accident..Passengers injured

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..பயணிகள் காயம்!

palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி மெயின் ரோட்டில் வேகத்தின் சென்ற பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் அருகில் திருச்சி - கோவை  சாலையில்  60 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி தனியார் பேருந்து ஒன்று  வேகமாக வந்துகொண்டிருந்தது.

அப்போது, எதிரே ஒரு வளைவில் இருந்து 20 ஊழியர்களுடன் தனியார் நிறுவன பேருந்து ஒன்றும் வந்துகொண்டிருக்கும்போது, தனியார் பேருந்து வந்த வேகத்தில், இதன் மீது மோதியது. இதில், பணியன் நிறுவன ஊழியர்களை ஏற்றிய வந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. உள்ளே இருந்தவர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்..வைரலாகும் வீடியோ