வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (18:52 IST)

மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்..வைரலாகும் வீடியோ

pistha
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விமானம் ஒன்று மேம்பலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மா நிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தின் தலை நகரான ஹைதராபாத்தில் பிரபல  நிறுவனமான பிஸ்தா ஹவுஸ் பழைய விமானம்   ஒன்றை வாங்கி அதை ஓட்டலாக  மாற்ற திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், கேரள மா நிலம் கொச்சியில் இருந்து வாங்கிய ஒரு விமானத்தை சாலை வழியாகக் அங்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தது.

இந்த நிலையில், பல சக்கரங்கள் கொண்ட ராட்சத லாரியின் மூலம் சாலை வழியில்  ஆந்திர மா நிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லா என்ற பகுதியில் வரும்போது, ஒரு மேம்பாலம் அடியில் விமானம் சிக்கியது.

இந்த விமானத்தை மீட்கும் பணியில் மீட்புப்படையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj