செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (16:58 IST)

மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய  ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச்சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள அரசு உயர்  நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் படித்துவரும் பிளஸ் 2மாணிவியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. மாணவியின் செல்போனை பெற்றோர் வாங்கிப் பார்த்த போது, ஆபாச குறுஞ்செய்திகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளானர். இதுகுறித்து தீவிர விசாரணை செய்த போலீஸார் ஆசிரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.