சாலையோரம் இறந்துகிடந்த பச்சிளம் குழந்தை....மக்கள் அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையோரம் ஒரு குழந்தை இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் தெற்குபாளையம் என்ற பகுதியில் நேற்று காலையில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 7 மாதக் குறை பிரசவசத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதை மீடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Edited by Sinoj