1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (08:02 IST)

சென்னையில் கூடுதலாக இயங்கும் பேருந்துகள் : எங்கெங்கு தெரியுமா?

சென்னையில் கூடுதலாக இயங்கும் பேருந்துகள் : எங்கெங்கு தெரியுமா?
சென்னையில் இன்று முதல் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்ற காரணத்தினால் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகரப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, இன்று முதல் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சசேரி, மணலி, கண்ணகி நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.