1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:46 IST)

சி.எஸ்.கே அணியில் இணைந்த புதிய ஆஸ்திரேலிய வீரர்!

சி.எஸ்.கே அணியில் இணைந்த புதிய ஆஸ்திரேலிய வீரர்!
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணி தற்போது விராட் கோலி அணியுடன் முதல் போட்டியில் வெல்லுமா என்பதை இன்று பொறுத்திருந்து பார்ப்போம் 
 
நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் சென்னை அணியில் ஜோஸ் ஹேசல்வுட் விலகியதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டார்ப் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதல் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது