தொடர்புடைய செய்திகள்
- காதலிக்க மறுத்த ஐ.டி இளம்பெண் எரித்துக் கொலை! – முன்னாள் காதலன் செய்த கொடூரம்!
- இளைஞர் கழுத்தறுத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!!
- நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
- மனைவியை கடை உரிமையாளர் அபகரித்ததாக புகார்! குடி போதையில் கார்களை அடித்து நொறுக்கிய கணவர் கைது...!
- 7 வயது சிறுவனை கொன்ற உறவுக்கார பெண்! சடலத்தை கோணிப்பையில் போட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம்..!!!
2 மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட பரிதாபம்..!
ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் பிஎஸ்என்எல் ஊழியர் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியை சேர்ந்த அண்ணாதுரை என்ற பிஎஸ்என்எல் ஊழியர் ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அண்ணாதுரை நேற்று குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. வழக்கம் போல் போதையில் இருந்த அவர் முதல் மனைவியிடம் தகராறு செய்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி தனது கணவனின் கழுத்தை நைலான் கயிற்றால் நெருக்கி கொலை செய்துள்ளார்.
தனது கணவரை கொலை செய்ததை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அவர் சொல்ல காவல்துறையினர் விரைந்து வந்து அவரை கைது செய்து அவருடைய கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த பிஎஸ்என்எல் ஊழியர் போதை காரணமாக முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
