வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (18:52 IST)

7 வயது சிறுவனை கொன்ற உறவுக்கார பெண்! சடலத்தை கோணிப்பையில் போட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

ஆந்திராவில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனின் உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவடா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் ஹனீஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லவாடா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது  நீண்ட நேரம் ஆகியும் ஹனீஷை காணவில்லை என்பதால் சிறுவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தில் சிறுவனை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரேகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவனை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆந்திர மாநிலம் வரதைய்யபாளையம் அருகே உள்ள பி.என்.கண்டிகை பகுதியில் கொலை செய்து கோணிப்பையில் கட்டிப் போட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஆந்திர மாநிலம் பி.என்.கண்டிகைக்குச் சென்ற போலீசார் கோணிப்பையில் சடலமாகக் கிடந்த ஹனீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காளகஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.