1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (14:56 IST)

நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

nellai
நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
 
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் மீட்பு படையினர் அவர்களை மீட்டு வருகிறது. தமிழக அரசு மக்களுக்குத் தேவையான   மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் துரிதமாகச் செய்து வருகிறது.

இந்த நிலையில்,  நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 119 பள்ளிகளில் 1108  பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840  நியாய விலைக்கடைகளில் 63  நியாய  விலைக்கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்தன என்று தெரிவித்துள்ளார்.