ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (23:26 IST)

மே.இ.தீவுகள் நாட்டின் பெண்களுக்கு உருப்படியான காரியத்தை செய்த பிராவோ

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற பேட்கல் அல்லது துணிகளை பயன்படுத்துவதை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் மலிவான அதே நேரத்தில் தூய்மையான பேட்களை உபயோகிக்க வேண்டும் என்று யோசித்து மலிவுவிலை பேட் மிஷினை கண்டுபிடித்தார்.
 
இந்த மிஷின்கள் மூலம் தயாரிக்கபடும் பேட்கள் பெண்கள் தற்போது மாதவிடாய்க்காலத்தில் பயன்படுத்தும் மற்ற நிறுவனங்களின் 'பேட்'களைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவான விலையில் கிடைக்கின்றது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர் அருணாச்சலம் முருகானந்தம். 
 
இந்த நிலையில் தற்போது தமிழக சுற்றுப்பயணம் செய்து வரும் பிரபல மேற்கிந்திய தீவுகள் நாட்டின் கிரிக்கெட் வீரர் பிராவோ, கோவை சென்று அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை சந்தித்து இந்த மிஷின் செயல்படும் திறன் குறித்த விவரங்களை சேகரித்து கொண்டார்
 
இந்த மிஷின் மூலம் தங்கள் நாட்டு பெண்களுக்கும் மலிவான விலையில் சுகாதாரமான 'பேட்'கள் கிடைக்க அருணாச்சலம் அவர்களிடம் அவர் ஆலோசனை பெற்றதாகவும் இந்த இயந்திரத்தை தன்னுடைய நாட்டில் நிறுவுவது குறித்த ஆலோசனைகளை பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் அவரே இதற்கான முழு முயற்சிகளையும் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது