வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (19:27 IST)

ஸ்பைடர்மேனை இணையத்தில் ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி

நாளை ஸ்பைடர்மேன் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவிருக்கும் நிலையில் அதை முன்கூட்டியே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 23வது படம் ஸ்பைடர்மேன். உலகமெங்கும் ரசிகர்களின் தீவிர எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் ஜூன் 28ல் ஜப்பான் மற்றும் சீனாவில் ரிலீஸானது. உலகமெங்கும் வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் ஆவதால் தமிழ்ராக்கர்ஸுக்கு இது வசதியாய் போய்விட்டது. சீனாவில் படம் வெளியான இரண்டாவது நாளே படத்தை இணையத்தில் விட்டது தமிழ்ராக்கர்ஸ். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் பல ரசிகர்கள் “மார்வெல் திரைப்படங்களை நல்ல தியேட்டரில், நல்ல ஒலி அமைப்போடு பார்க்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம், திருட்டு தனமாக பதிவு செய்யப்பட்ட வீடியோவில் கிடைக்காது” என கூறியுள்ளார்கள். அவெஞ்சர்ஸ்: எண்ட் கேமிற்கு பிறகு வெளிவரும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

சீனா, ஜப்பான் நாடுகளில் வெளியாகி ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் ஸ்பைடர்மேன் 764 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் பல நாடுகளில் படம் ரிலீஸாக இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.