கமல்ஹாசனின் ’அந்த படத்தை’ ரீமேக் செய்ய ஆசை - விக்ரம்’ ஓபன் டாக்’

vikram
Last Modified வியாழன், 4 ஜூலை 2019 (20:26 IST)
கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்து, அதில் சப்பாணி வேடத்தில் நடிக்க ஆசை என்று நடிகர் விக்ரம் தெரிவித்தார்.
நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரம் நடித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். இதில் கமலின் கமல் அக்‌ஷரா ஹாசன் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.
 
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விக்ரம் :  நான் படிக்கும் போது, ஏற்காட்டில், தமிழ் படங்களை போடுவார்கள். அப்போது நாங்கள் தேர்வு செய்வது கமல் படங்களைத்தான்.கமலைப் பார்த்து நான் நடிக்க வந்தேன். கமலின் 16 வயதினிலே படத்தை ரீமேக் செய்து அதில் சப்பானி வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. அவரது எல்லா படங்களையும் பார்த்துள்ளேன்! என்று தெரிவித்தார்.
 
அதனால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், விக்ரம் நடிகர் கமலைப் புழந்தும், அவரது படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளதால் கமலின் ரசிர்கள் இதை வைரல் ஆக்கிவருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :