திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (21:31 IST)

'கடாரம் கொண்டான்' எந்த படத்தின் ரீமேக்: கண்டுபிடித்த நெட்டிசன்கள்

சீயான் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கிய 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரமின் ஆக்சன் நடிப்பும், அக்சராஹாசனின் அனுதாப நடிப்பும் பேசப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்த படம் 'பாயிண்ட் பிளாங்க்' என்ற பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு திரைப்படங்களின் டிரைலர்களும் ஒரே மாதிரியாக இருப்பது இதனை உறுதி செய்வது போல் தெரிகிறது.
 
இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய முந்தைய படமான 'தூங்காவனம்' படமும் 'ஸ்லீப்லெஸ் நைட்' என்ற பிரெஞ்ச் மொழி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் ஏற்கனவே ஒருசில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டு 'தி டார்கெட்' என்ற பெயரில் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் இந்தி, பெங்கால், மற்றும் ஆங்கில மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த மொழியிலும் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. தமிழில் இந்த படத்தின் வெற்றி எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்