1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bomb blast kills 2 injures more than 20

நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு 2 பேர் பலி, சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம்!

நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் நீதிமன்ற வளாகம் முழுக்க பதற்றம் நிலவி வருகிறது. மாவட்ட நீதிமன்றம் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
 
இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியான நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
About Writer
Papiksha Joseph