செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 நவம்பர் 2021 (12:01 IST)

அரியலூர் மாவட்டத்தில் இடிதாக்கி சுவர் விழுந்து 2 பேர் பலி!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்துவருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தேவாங்க முதலியார் தெருவில் வசிக்கும் சுப்ரமண்யன் என்பவரின் வீட்டில் இடிதாக்கியுள்ளது. அதில் அவர் வீட்டின் மாடியில் இருந்த நீர்த்தேக்க தொட்டி சாய்ந்து அருகில் இருந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டின் மேல் விழுந்துள்ளது.

இதில் அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் 85 வயது தாய் லட்சுமி, மற்றும் ஆறுமுகத்தின் 25 வயது மகன் அஜித்குமார் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர். பலியான அஜித்குமாருக்கு இன்னும் 15 நாட்களில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.