ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (18:55 IST)

பால்டிக் கடலில் சரக்கு கப்பல்கள் மோதல் - 2 பேர் பலி

சுவீடன் கடலோர பகுதியில் பால்டிக் கடலில், 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஒரு கப்பல் கவிழ்ந்தது. மூழ்கிய கப்பலில் இருந்த இருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களால் இதுவரை மூழ்கிய படகில் இருந்த இருவரையும் இதுவரை கண்டறிய முடியவில்லை. விபத்துக்குள்ளான கப்பல் அமெரிக்க கொடியுடன் இருந்தது.
 
குளிர்ந்த நீரில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக, சுவீடன் கடல்சார் நிர்வாக (SMA) செய்தித் தொடர்பாளர் ஜோனஸ் பிரான்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.
 
மேலும் "மிகவும் குளிராகவும் இருட்டாகவும் இருக்கிறது, தண்ணீரின் வெப்பநிலை 4C (39F) மற்றும் காற்றின் வெப்பநிலை 5C (41F) ஆக உள்ளது' என்று ஜோனஸ் பிரான்சன் கூறியுள்ளார்.
 
பால்டிக் கடற் பகுதியில் தெற்கு சுவீடன் கடலோர நகரமான யஸ்டாட் மற்றும் டென்மார்க் நாட்டின் தீவான போர்ன்ஹோல்ம் இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.