1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. sivakarthiieyan talk in chepalk stadiyum with dhoni

25 கிலோ மீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்!. தோனியை புகழ்ந்த SK-வை பங்கம் பண்ணிய மாறன்.

dhoni sk
அமரன் திரைப்படத்தின் மெகா வெற்றி நடிகர் சிவகார்த்திகேயனின் இமேஜை மாற்றியிருக்கிறது. ரஜினிகாந்தை போல நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வரவேற்பு பெற்றால் அந்த படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி பேசுவது, அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவது, பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு அறிவுரை சொல்வது என சிவகார்த்திகேயன் அடுத்த இடத்திற்கு சென்று விட்டார்..

ஒருபக்கம் பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நக்கல்டித்து வருகிறார். குறிப்பாக அவரை ‘திடீர் தளபதி’ என கலாய்த்து வருகிறார் மாறன். சிவகார்த்திகேயனின் பல செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில்தான், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரீயூனியன் நிகழ்ச்சி நடந்தது.

அதில் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினரக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அந்த மேடைய்ல் பேசிய தோனியை வைத்துக் கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் ‘நான் சேப்பாக்கத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளில் இருக்கிறேன்.. நீங்கள் சேப்பாக்கத்தில் விளையாட இறங்கும்போது இங்கு வரும் விசில் சப்தம் எனக்கு அங்கு கேட்கும்’ என பேசுயிருந்தார்.

இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள புளூசட்ட மாறன் ‘அமரன் படம் ஓடினாலும் ஓடுச்சு.. அரசியல், இலக்கியம், ஆன்மீகம், வில்லுப்பாட்டு, விளையாட்டுன்னு எந்த பக்கம் போனாலும் திடீர் தளபதி அங்கு சலங்கை கட்டி ஆடுறார். 25 கிலோமீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்’ என நக்கலடித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
28 ஆண்டுகளுக்கு முன் அப்பா அம்மாவுக்கு எழுதிய கடிதம்.. 'துரந்தர் 2' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு..!