நான்குநேரியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கின்றதா அதிமுக?

sivalingam| Last Modified ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:32 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முறைப்படி அறிவித்தது. இதனை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது


இந்த நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக மற்றும் திமுக கூட்டணி தயாராகி வருகின்றன. டிடிவி தினகரனின் அமமுக் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய தயாராகி வருகிறது


ஆனால் அதிமுக தரப்பில் இருந்து இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு அதிமுக விட்டுக் கொடுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’நாங்குநேரி தொகுதியை பாஜக விட்டு விட்டுக் கொடுப்பது பற்றி கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்’ என்று கூறினார். மேலும் அரசியலின் ஆழம் தெரியாமல் கமல்ஹாசன் காலை விட்டு விட்டார் என்றும் தற்போது வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :