வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 பிப்ரவரி 2026 (16:41 IST)

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

pakistan
காஷ்மீரில் பஹல்காம் பயங்கர தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானிடம் இந்தியா கெடுபிடி காட்ட துவங்கியிருக்கிறது. ஏற்கனவே ரத்தமும் நீரும் ஒன்றாக பாயாது என அறிவித்த பிரதமர் மோடி சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தினார். தற்போது சிந்து நதி பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லவில்லை
. ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீரில் பாயும் ரவி நதியின் பாகிஸ்தானுக்கு செல்வதை தடுக்க குறுக்கு நீர்மீன் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டும் பணிகளை மத்திய அரசு துவங்கியது.

கடந்த சில மாதங்களாக இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மார்ச் மாதம் இதன் பணிகள் முடிந்துவிடும் எனத்தெரிகிறது. எனவே ஏப்ரல் மாதம் முதல் பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நதியின் நீர் வரவு குறைந்துவிடும். இதான்ல், பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது..

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் நீர் வாளத்துறை அமைச்சர் ஜாவாத் அகமது ராணா ‘ இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாக சென்ற நீரை இனி நம் நாட்டு விவசாயிகளுக்கு பயன்படுத்துவோம்’ என கூறியிருக்கிறார். இந்திய அரசின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..