வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (09:53 IST)

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கமல் அதிரடி அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அக்டோபர் 23ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21 இல் வாக்குப்பதிவு என்றும், அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
 
இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு வரவேற்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. திமுக தரப்பில் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுத்துவிட்டு விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது
 
 
இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அமமுக போட்டியிடாது என்றும், அமமுகவுக்கு நிரந்தரமாக தனி சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எனவே அமமுக இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டது
 
 
டிடிவி தினகரன் போலவே கமல்ஹாசனும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்ப மாட்டார் என்றே கருதப்பட்டது. அது தற்போது உறுதியாகியுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியில்லை என அக்கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் சற்றுமுன் அறிவித்துள்ளார். சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்