செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:51 IST)

இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என விஜயகாந்த் மகன் அறிவிப்பு! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அதிமுகவுடனான கூட்டணியை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகவுள்ளதா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது
 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக தலைமை கூறினால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என கூறியுள்ளார். ஏற்கனவே விக்கிரவாண்டி அருகில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் ஒருவேளை தேர்தலில் போட்டியிட தேமுதிக முடிவு செய்துவிட்டால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் என எதிர்பார்க்கப்பட்டது
 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்தே வெற்றி பெற முடியாத தேமுதிக, தனித்து போட்டியிட்டு வெற்றியை ருசிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது