செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2019 (19:53 IST)

நாங்குநேரி தொகுதி வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்தவை!? – மாவட்ட கலெக்டர் தகவல்

நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அவற்றில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகளோடு மாவட்ட ஆட்சியர்களும் இணைந்து வாக்கு சாவடிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் நாங்குநேரி வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும். நாங்குநேரியில் உள்ள 299 தொகுதிகளில் 36 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக உள்ளன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.” என்று கூறியுள்ளார்.

மேலும் மக்களுக்கு பணம் வழங்குதல் போன்ற குற்ற செயல்களை தடுத்து நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தேர்தல் குறித்த தங்களது புகர்கள், சந்தேகங்களை பதிவு செய்ய மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.