தொடர்புடைய செய்திகள்
- சிறுமியை வன்கொடுமை செய்த 40 வயது ஆசாமி! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
- பாமகவிடம் பேச ஏதுமில்லை - அண்ணாமலை
- ஒரு ஏடிஎம் மிஷினையும் உடைக்க முடியல..! – சுத்தியலோடு சரண்டர் ஆன கொள்ளையன்!
- இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகள்: பெரும் சாதனை!
- ஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு அளிக்க நாளையே கடைசி!
வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல் - ஷாக்கில் பாஜக
திடீரென அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, அதிமுக-பாஜ இடையே நேற்று மாலை 2வது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், திடீரென அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் பாஜக கட்சி தொண்டர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.
