1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:43 IST)

இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகள்: பெரும் சாதனை!

இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகள்: பெரும் சாதனை!
கூடைப்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று தமிழக வீராங்கனைகள் ஒரே நேரத்தில் இந்திய சீனியர் அணியில் அணியில் இடம்பெறுவது இதுதான் முதல் முறை என்றும் இது ஒரு சாதனை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
நாகப்பட்டினத்தை சேர்ந்த சத்யா, புஷ்பா சகோதரிகளுடன் சென்னையை சேர்ந்த நிஷாந்தி ஆகிய மூவர் இந்திய சீனியர் அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த மூன்று வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விரைவில் ஜோர்டானில் நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்த மூன்று வீராங்கனைகளும் பங்கேற்க தேர்வு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.