1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP demands a MP seat from ADMK after DMDK

தேமுதிகவ விட நாங்க கேவலமா போய்டோமா? அதிமுகவை குடையும் பாஜக!!

தேமுதிக
தேமுதிகவை அடுத்து பாஜகவும் எம்பி சீட் வேண்டும் என அதிமுகவிடம் கேட்டு போர்கொடி தூக்கியுள்ளது. 
 
ஏப்ரல் மாதத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.    
 
தற்போது இந்த பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்கள் ஒரு பக்கம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எம்பிக்க்ள் யாரும் இல்லை என வர்கள் பக்கம் போர்கொடி தூக்கியுள்ளனர்.    
போதாத குறைக்கு தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரேமலதா சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்தார். 
 
அதில் அவர் கூறியதாவது, தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினார்கள். நாங்கள் தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினகங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம் என தெரிவித்தார். 
 
எனவே இது அதிமுக தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவுக்கு இக்கட்டடாண சூழ்நிலையை உருவாக்கியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார். ஆம், அவர் சமீபத்திய பேட்டியில், மாநிலங்களவை எம்பி பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் செய்திருந்தது என குண்டு தூக்கி போட்டுள்ளார். 
இது இப்படி இருக்க, மக்களவை தேர்தலில் கேட்ட தொகுதியை தான் தரவில்லை, அப்படியிருக்கும் போது தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், மக்கள் திட்டங்களை எடுத்து செல்லும் வகையில் எங்களுக்கும் மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவால் தான் தமிழகத்தில் ஆட்சியை இன்னும் நீடித்து வருகிறது. அதேபோல நாங்கள் தேமுதிகவை நாங்கள் சலித்துவிடவில்லை எனவும் கூறியுள்ளதாக தெரிகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸா? – ரசிகர்கள் அதிர்ச்சி! ஜாக்கி சான் விளக்கம்!