1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (08:07 IST)

தல சொன்னது எனக்கு நடக்குது – திரௌபதி இயக்குனர் மோகன் ஜி பெருமிதம் !

திரௌபதி படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் மற்றும் இதுவரை வெளியே தெரியாத இயக்குனர் என குறைந்த பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. கிட்டத்தட்ட 330 திரைகளில் வெளியான இந்த படம் முதல் நாளிலேயே தனது பட்ஜெட்டை விட அதிகமாக வசுலித்து விட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இடைநிலை சாதி மக்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு காரணமாக இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எந்தவொரு பெரிய புரமோஷனும் இல்லாமல்  இயக்குனர் மோகன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஒரு நல்ல படம் தன்னை தானே விளம்பரபடுத்தி கொள்ளும் - தல சொன்னது.. இப்ப எனக்கு நடக்குது.’ எனத் தனது படத்தின் வெற்றிக்கு பெருமிதம் கொண்டுள்ளார்.

திரௌபதி படத்தின் இந்த வெற்றிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், ஹெச் ராஜா, அர்ஜுன் சம்பத் போன்ற அரசியல்வாதிகளின் பாராட்டு வார்த்தைகளும் ஒரு பெரிய புரோமோஷனாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.