தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- எங்களுக்கு ’சவுகிதார் ’ உங்களுக்கு ’பப்பு ’ - பாஜக அமைச்சர் கிண்டல்
- சுவாமி மலையில் எச்.ராஜா அரசியல் ஆருடம்: பாஜகவின் வெற்றி நிலவரம் எப்படி?
- சவ்கிதாரா?? கூர்க்காவே போதுமே அதுக்கு!!! டிவி நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்த இளைஞர்; அசிங்கப்பட்ட பாஜக தலைகள்
- ஹர்திக் பட்டேலை எதிர்த்து கிரிக்கெட் வீரரின் மனைவி: பாஜகவின் மெகா திட்டம்
இன்று பாஜக வேட்பாளர் பட்டியல்! தமிழிசை போட்டி எங்கே?
அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
குறிப்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் மற்றும் தூத்துகுடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது
இதில் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும், சிவகங்கையில் எச்.ராஜாவும், தூத்துகுடியில் தமிழிசை செளந்திரராஜனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கோவை மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் மூன்று பிரபலங்களின் பெயர்கள் உலவி வருகிறது.
அதேபோல் இன்று காங்கிரஸ் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
