எங்களுக்கு ’சவுகிதார் ’ உங்களுக்கு ’பப்பு ’ - பாஜக அமைச்சர் கிண்டல்

bjp
Last Updated: புதன், 20 மார்ச் 2019 (12:34 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்களைக் கவர பல்வேறு யுக்திகளை பல்வேறு கட்சிகள் எடுத்து வருகின்றனர். பாரத பிரதமர் மோடி முதற்கொண்டு அனைத்து பாஜகவினரும் தங்கள் பெயருக்கு முன்னால் சௌகிதார் என்று சேர்த்துக் கொண்டனர். இந்நிலையில் காங்கிரஸ் தம் பெயருக்கு முன்னால் பப்பு என்று பட்டப்பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அரியான மந்திரி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நானும் காவலன் தான் என்று குறிப்பிடும் வகையில் தன் பெயருக்கு முன்னால் சவுகிதார் என்று குறிப்பிட்டார். இதே போன்று  அனைத்து பாஜகவினரும் செய்தனர்.
 
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமாக பாஜகவினரை கிண்டல் செய்தனர்.  இதற்கு பதிலடி தரும் விதத்தில் பாஜகவை சேர்ந்த அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் என்பவர் தன் டுவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 
பாஜகவினரான எங்களுக்கு சவுகிதார் என்ற அடைமொழி பிடித்துள்ளதால் அதை பெயரின் முன்னால் சேர்த்துள்ளோம்.  உங்களுக்கு வேண்டுமானால் பப்பு என்ற பெயரை பட்டப்பெயராக  வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
 
பப்பு என்பதற்கு ஏதும் அறியாத சிறுவன் என்று அர்த்தம். சில நேரங்கள் அரசியலில் பாஜக  மூத்த தலைவர்களான மோடி, ஜெட்லி போன்றோர் ராகுலை பப்பு என்று அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :