1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanisamy not joined with PM conference

தேர்தல் பிரச்சாரத்தில் செம பிஸி; பிரதமர் ஆலோசனையில் பங்கேற்காத எடப்பாடியார்!

Tamilnadu
கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் காணொலி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதால் இன்று பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 28,903 பாதிப்புகள் உறுதி – இந்தியாவில் கொரோனா நிலவரம்