பாஜக கூட்டணியில் 3 தமிழக கட்சிகள்: நாளை முக்கிய பேச்சுவார்த்தை

Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (12:22 IST)
பாஜக கூட்டணியில் 3 தமிழக கட்சிகள்: நாளை முக்கிய பேச்சுவார்த்தைபாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாகிவிட்டதை அடுத்து பாஜக-அதிமுக கூட்டணி குறித்து கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வரவுள்ளார். அதிமுக, பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அவரது வருகை தமிழகத்தில் பாஜக கூட்டணியை உறுதி செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது.


கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாஜக இருந்தது என்பதும் அதிமுக தனித்து போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக தற்போது திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :